Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்பார்ட்டுக்கு போன சீமான்…! உடனே போன் போட்ட அமைச்சர்… மாஸ் காட்டிய NTK கட்சி ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு முறையும் நாம் தமிழர் கட்சி அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையிலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது.

நாமளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் அண்ணன் தேங்காய் பட்டினம் துறைமுகத்தை சென்று பார்வையிட்டார். இதுவரைக்கும் 15க்கு மேற்பட்டவர்கள் அந்த துறைமுகத்தினால், துறைமுகம் சரியாக கட்டமைக்கப்படாததால் ஒன்பது ஆண்டுகாலம் கட்டியிருக்கிறார்கள், 9 ஆண்டுகாலம் கட்டமைப்பு நடத்தப்பட்டும்…

இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்…  நாங்கள் தான் ஆகசிறந்த அறிவாளிகள், விஞ்ஞானிகள்,  கடல் சூழியல் ஆய்வாளர்கள் என்றெல்லாம் பேசியவர்கள், 9 வருட காலம் கட்டியும் இன்னும் கடலோடி மக்கள், தான் சரியாக அந்த கடலை கடந்து வரக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியாத இவர்கள்… ஒரு கடலோடி சொல்கிறார்…  ஒரு கிலோ மீட்டர் அளவுக்காவது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால் மட்டும்தான் வாடைக்காற்று நாட்களில் எங்களால் படகை சரிவர கொண்டுவர முடியும் என்று கடலோடி சொல்கிறார்கள், இவர்கள் தற்குறி என்று தள்ளிவைத்த நாங்கள் சொல்கிறோம்.

ஆனால் அத்தனை விஞ்ஞானம் படைத்தவர்களால் கட்டமைக்கப்பட முடியவில்லை, 15 உயிர்கள் பலி போய் இருக்கிறது. ஒரு மனிதன்…. எங்கே ஒரு மூலையில் இருக்கிறார் நான் தமிழர் கட்சி ?  சின்னப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து உருவாக்கி இருக்கிறது என்று சொன்னார்கள், நேற்று சென்ற உடனே மனோஜ் தங்கராஜ் அவர்கள் உடனே லைனில் வந்து  தொடர்பு கொண்டார். 240 கோடி ஒதுக்கி இருக்கிறோம்னு சொல்லுறீங்க எங்கே ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள்? அங்கே ஒரு 50 லட்சம், இங்கே ஒரு 40 லட்சம் செஞ்சிட்டோம், பதற வைத்து விட்டது நாம் தமிழர் கட்சி என தெரிவித்தார்.

Categories

Tech |