Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்பப் பிரச்சனை… குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்… 2 உயிர் பறிபோன சோகம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையால் இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் சேவப்பநவாரி இரண்டாம் தெருவில் சுரேஷ் (40) என்பவர் தனது மனைவி செந்தமிழ் செல்வி (38) மற்றும் இரு குழந்தைகள் ஸ்வேதா(12), கோகுல் செழியன்(4) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ் மற்றும் செந்தமிழ் செல்வி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போலவே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறு முற்றியதால், மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி தனது இரு குழந்தைகளுடனும் நேற்று அதிகாலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த செந்தமிழ்ச்செல்வியை முதலில் மீட்டுள்ளனர். பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஸ்வேதா மற்றும் கோகுல செழியன் ஆகிய இரு குழந்தைகளையும் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், ஒரு குழந்தையின் உடல் கிடைத்து விட்டது. மீதமுள்ள குழந்தையின் உடலை தேடும் பணி நடைபெறுகிறது..

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகிய இரு நபர்களையும் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Categories

Tech |