Categories
தேசிய செய்திகள்

“விக்ரம் லேண்டர்” தேடும் பணி கிட்டத்தட்ட முடிவு… ISRO ட்விட்…!!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது.

சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி அவர்களது முயற்சிகளை தொடருமாறு பாராட்டிப் பேசினார்.

Image result for விக்ரம் லேண்டர்

தொடர்ந்து ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டர் தேடிவந்தது. இஸ்ரோ நிலவின் மேற்பரப்பில் செயல் இழந்த விக்ரமுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த சந்திராயன்-2 விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இவர்களுடன் நாசாவும் தொடர்ந்து விக்ரம் லேண்டரை தேடும் பணியில் முயற்சி செய்து வருகிறது. விக்ரமுடன் தொடர்பு கொள்ள 14 நாட்கள் கெடு இருந்த நிலையில்,

Image result for விக்ரம் லேண்டர்

பத்து நாட்களை கடந்தும் இதுவரை எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் விக்ரம் லேண்டரை நிரந்தரமாக இழக்கக்கூடிய தருணம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் இஸ்ரோ விடுத்த ட்விட்டர் செய்தியில் தங்கள் இறப்பிலும் துணைநின்ற இந்திய மக்களின் ஆதரவுக்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை முன்னெடுப்போம் என்றும் இஸ்ரோ தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

Categories

Tech |