இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எந்த பயங்கரவாத இயக்கத்தின் பெயறும் குறிப்பிடாமல் வந்த மெயிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அங்கிருந்து பகிர்ந்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கூறும்போது, அந்த மிரட்டல் தகவல் உண்மைதான். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மும்பை போலீசுக்கும் தகவல் கூறியுள்ளோம். ஆண்டி குவா வில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அனுப்பியதையடுத்து இந்திய வீரர்களுக்கு அங்கே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.