கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது.
அது சிலரை பொய் பேச வைத்து விடும் என்று கூறினார். அதன் பிறகு நடவ் பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதரும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு பிரகாஷ்ராஜ் தற்போது டுவிட்டரில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் அவமானம் இப்போது அதிகாரப்பூர்வமானது மற்றும் சும்மா கேட்கிறேன் போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜின் பதிவுக்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்து வருகிறது.