Categories
உலக செய்திகள்

கடல் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்… சுற்றுச்சூழல் மோசமடைய வாய்ப்பு… மீட்புக் குழு அறிவிப்பு…!!

மொரீசியசில் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

சென்ற மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மூலம் கசியும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் பாதிப்படையக் கூடிய நிலைமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணமாக இருந்த இரு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் சதுப்பு நிலங்களோ, பவளப்பாறைகளோ பாதிக்கப்படவில்லை என்று ஜப்பான் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற்கொண்டு, மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தை முற்றுகையிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

 

Categories

Tech |