ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு நூறாக உடைந்து விட்டது.அந்த கார் மலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது திடீரென தானாகவே பிடிப்பு விலகி, மேலே இருந்து கீழ்நோக்கி வந்து சிலை மீது வேகமாக மோதியதில் அது சுக்கு நூறாக உடைந்தது.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, அதை கண்டு இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.