Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பம்… “4 பேரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை…!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28),  மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே  ஓம்பிரகாஷ் தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்..

Image result for Suicide by firearm

இந்நிலையில் ஓம் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் மைசூர் – ஊட்டி சாலையில் குண்டுலு பேட்டில்  உள்ள ஒரு ஓட்டல் சென்று தங்கி இருந்துள்ளார். பின்னர் இன்று அதிகாலை தான் வைத்திருந்த துப்பாக்கியால் குடும்பத்தினர் 4 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Image result for dead body

இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை காரணமாக கொலை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |