Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 16 மணிநேரம் வேலை…. அசந்து தூங்கிய நபர் உயிருடன் எரிப்பு… 15 நொடியில் சாம்பலான அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வரும் நிலையில், இறந்தவர் என நினைத்து ஒருவரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் பிடியில் சிக்கி முதலிடத்தில் இருக்கிறது.அங்கு நாள்தோறும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்நாட்டில் இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது.நியூயார்க்கில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இறுதிச்சடங்கு கூடத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது. அந்த இறுதிச் சடங்கு கூடத்தில் மைக்கேல் ஜோன்ஸ் (48 வயது) என்பவர் தொடர்ச்சியாக 16 மணிநேரம் வேலை பார்த்து வந்தார். இதன்  காரணமாக அவர் உடம்பு அசதியில் அங்கிருந்த ஒரு ஸ்ட்ரெச்சரில் அசந்து தூங்கி இருக்கிறார். அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர் இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்து அவரை உயிருடன் எரித்து விட்டார் என்று போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மைக்கேலுடன் பணியாற்றும் சக பணியாளர் ஆண்டர்சன் கூறுகையில், மைக்கேல் உயிருடன் எரிக்கப்பட்ட போது அவர் வெப்பம் காரணமாக தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அப்போது சத்தம் எங்கிருந்து வரும் என்று கண்டுபிடிப்பதற்குள் அவர் எரிந்து சாம்பலாகி விட்டார். 1400 முதல் 1800 பாரன்ஹீட் வெப்பத்தின் காரணமாக அவர் 15 நொடியில் இறக்க நேரிட்டது என கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |