மனைவியை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவிபிரசாத்.. இவருக்கு வயது 45.. கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.. வயது 37.. இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.. கொரோனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் போதுமான வருமானமில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த தேவிபிரசாத் தன்னுடைய மனைவி சரஸ்வதியை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவில் கை, கால்களை கயிறால் கட்டிப் போட்டு விட்டு சுத்தியலால் கொடூரமாக அடித்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இருவரின் உடல்களையும் போலீசார் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.