விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.. இவருக்கு வயது 52 ஆகிறது.. இவருக்கு ஜானகி (45) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ராஜேஸ்வரி (26) என்ற மகளும், செல்வம் (25) என்ற மகனும் உள்ளனர்.. இந்நிலையில் சுப்பிரமணியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.. அதேபோல் ஜூன் 28ஆம் தேதி இரவு மது குடித்து விட்டு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் குடும்பத்தினர் அவரை இழுத்துச் சென்று உறங்க வைத்துள்ளனர்.. அதனைத்தொடர்ந்து நேற்று காலை அவரை எழுப்பும்போது, அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து குடும்பத்தினர் உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சாத்தூர் நகர போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.