Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்ய தயாரான இளம்பெண்…. அழகுநிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட கொடூரம்… கதறும் மணமகன்..!!

அழகு நிலையத்திற்கு சென்ற புதுப்பெண் மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது சோனு என்ற இளம்பெண் பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும்,  கவுரவ் என்ற நபருக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஞாயிறு (நேற்று முன்தினம் ) அன்று திருமணம் நடப்பதாக இருந்தது.

அதனைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணப்பெண் சோனு அழகு நிலையத்துக்கு திருமண அலங்காரம் செய்து கொள்ள சென்றார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் சோனுவை அழகு நிலையத்திலிருந்து வெளியே வருமாறு அழைத்தான். பின்னர் திடீரென உள்ளே நுழைந்து அந்த இளைஞன் சோனுவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த சோனு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு சோனுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மாப்பிள்ளை கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. திருமண கனவு கலைந்து விட்டதை எண்ணி கதறி அழுதார் கவுரவ்.. காதல் பிரச்சினையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |