Categories
தேசிய செய்திகள்

நாளை திருமணம்… தூங்கச்சென்ற புதுப்பெண் வெளியே வரவில்லை… அறைக்குள் சென்ற போது தாய் கண்ட அதிர்ச்சி..!

கேரளாவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது மகள் அனுஷா.. இவருக்கு வயது 22 ஆகிறது.. அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (5ஆம் தேதி) திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது..

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி  இரவு தனது படுக்கையறைக்கு உறங்கச் சென்ற அனுஷா காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்து வெளியே வராமல் இருந்தார்.. இதனால் சந்தேகமடைந்த அவரது அம்மா ஷீலா கதவைத் திறந்து பார்த்தபோது, மகள் அனுஷா சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனுஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருந்த நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |