கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், இங்கிலாந்தில் இதேபோன்று சரக்கு லாரிக்குள் 39 பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது