Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்… தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்… சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் உடலை ரகசியமாக புதைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விஷயத்தை எப்படியோ கண்டுபிடித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தாமரையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.. செந்தாமரை இறந்து போனது தனது தாய் வீடு என்பதாலும், இறந்த பின் உடலை எவருக்கும் தெரியாமல் புதைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தியதில், திருமணத்துக்கு முன்னதாக செந்தாமரை வேறொரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன்பின்னரே மகளை சமாதானம் செய்து, இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

கல்யாணமானதில் இருந்தே செந்தாமரை மனமுடைந்து மிகவும் சோகத்துடன் காணப்பட்டு வந்ததோடு, அவர் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவுக்கு பின்னரே செந்தாமரை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உறுதியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |