Categories
சினிமா தமிழ் சினிமா

இனி ஆட்டத்த மட்டும் பாருங்க… கிளாப் தட்ட தொடங்கிய ‘தலைவி’..!!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது.

‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் கிளாப் போர்டை பதிவிட்டு, ‘தலைவியின் அழகான பயணத்தைத் தொடங்கியுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் அவரது நடை, உடை, பாவனை, ஆளுமைத்திறன் போன்றவற்றை அவரது படங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக பயிற்சி மேற்கொண்டுவந்தார் கங்கனா. அத்துடன் பரதநாட்டியமும் முறையாக கற்றுக்கொண்டார்.

இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா போன்ற தோன்றத்தைப் பெற புரொஸ்தடிக் மேக்கப்புக்கான அளவுகளை கொடுத்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

Kangana prosthetic makeup for Thalaivi movie

ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான பிளேட் ரன்னர், கேப்டன் மார்வெல் படங்களில் பணியாற்றிய மேக்கப் கலைஞரான ஜேசன் காலின்ஸ், ‘தலைவி’ படத்தில் பணியாற்றுகிறார். இந்திய அளவில் வசூல் வேட்டையில் டாப்பில் இருக்கும் ‘பாகுபலி’ பட எழுத்தாளர் கே.வி. விஜயேந்திர பிரசாத், பாலிவுட் சூப்பர் ஹிட் படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ பட எழுத்தாளர் ராஜத் அரோரா ஆகியோர் ‘தலைவி’ படத்துக்கு திரைக்கதை பணிகளை மேற்கொள்கின்றனர்.

https://www.instagram.com/p/B4r3HA-phqJ/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/p/B4sWkr8J9Qs/?utm_source=ig_web_button_share_sheet

 

Categories

Tech |