அறந்தாங்கியில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது.
இதனால் மூன்று கடைகளிலும் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதை அடுத்து சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . பின்னர் , இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது . மேலும் இவ் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.