சிக்னல் செயலி ஆரம்ப பயனாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்படுத்திய தேவையில்லாத பிரச்சினையின் காரணமாக ஏராளமான பயனர்கள் சிக்னல் செயலிக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப பயனாளர்களுக்கு இந்த சிக்னல் செயலி சரியான பொருத்தமாக அமையும். இதற்கு காரணம் என்னவென்றால் ஸ்டிக்கர், வால்பேப்பர்ஸ், எமோஜிஸ் போன்றவை வேறு எந்த செயலியிலும் கிடையாது. சிக்னல் ஒவ்வொன்றாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
வால்பேப்பர், தீம்ஸ் போன்ற அம்சங்களுக்கான அப்டேட் வந்துள்ளது. தற்போது வரை சிக்னல் பயனாளர்களை ஈர்க்கும் செயலியாக உருப்பெறவில்லை. எனவே சிக்னல் செயலி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை சந்தேகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.