மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு திமுக சார்பில் பொது கூட்ட மேடையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வந்த நிலையில், தற்போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டத்தின் மேடையில்மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.