Categories
அரசியல்

அமைதியாக சென்ற OPS , EPS ……அதிமுகவில் தொடர்கின்றதா குழப்பம்……!!

முதல்வர் , துணை முதல்வர் எவ்வித பதிலும் சொல்லாமல் கிளம்பி சென்ற நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக , பாஜக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , தமாக மற்றும் N.R காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது .

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்து இன்று காலை சென்னை தனியார் ஹோட்டலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் அதிமுக_வில் மீண்டும் குழப்பம் இருந்து வருவது தெரிகின்றது.

Image result for OPS , EPS

இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்   வேட்பாளர் பட்டியல் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் 9.45 மணிக்கு முடிந்த நிலையில் வெளியே வந்த OPS மற்றும் EPS எவ்வித பதிலும் சொல்லாமல் சென்றனர்.

Image result for OPS , EPS

இதையடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித பத்திரிக்கையாளர் சந்திப்பும் இல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்றதும் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியது.இதனால் அதிமுக கட்சிக்குள் ஏதோ குழப்பம் இருப்பதாக தெரிகின்றது. மேலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தான் இழுபறி என்றும்  முக்கிய நிர்வாகிகள் சீட் கேட்பதாகவும் கூறப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |