தமிழக முதல்வர் நாளை 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து நடத்திய மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்கின்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைக்கிறார். நாளை தொடங்கும் இந்த திட்டத்தினால் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் கார்டு மூலம் தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் விரைவில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.