Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிராமத்தில் வீசிய துர்நாற்றம் …. ஊருக்குள் கசிந்த தகவல்! தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி..!

குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி  யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது.

இதையடுத்து  பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து  தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க  ஆண் யானை ஓன்று  தோட்டத்திற்குள்  நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது.

இந்த சம்பவம் வெளிய தெரிந்தால் வனத்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என பயந்த பிச்சாண்டி, அசோக் குமார் என்பவரின் (JCB ) ஜேசிபியை வரவழைத்து தோட்டத்தில் இராட்சத பள்ளம் தோண்டினர். பின்னால் மின்சாரம் தாக்கி இறந்த யானையை அந்த பள்ளத்தில்  முடியுள்ளார்.

எப்படியோ! இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து  விட்டதாக நினைத்து நிம்மதி அடைந்தார் பிச்சாண்டி.  ஆனால் இது குறித்த தகவல் அந்த பகுதியில் கசிய தொடங்கி பரவ ஆரம்பித்தது.

இந்நிலையில் இது கலெக்டர் சண்முகசுந்தரம் அவரின் காதுக்கு சென்றதால் வனத்துறை விசாரணையை தொடங்கியது. பின்பு விசாரணையின் பெயரில் அவரது நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது  ஒரு பகுதியில்  துர்நாற்றம் வீசியது.

மேலும் புதியதாக தோண்டி மூடியவாறு இருந்த நிலையில் அந்த இடத்தை தோண்டியபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த யானையின் உடல் புதைக்க பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்பு யானையின் உடல் மீட்கப்பட்டு அங்கேயே பிரேதே பரிசோதனை செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு அதே குழியில் அடக்கம் செய்தனர். தப்பி ஓடிய பிச்சாண்டியை போலீசார் தேடிவருகின்றனர்

Categories

Tech |