14 வயது சிறுமி விஷ நாகம் கடித்து பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேற்கு வங்காளம் சோனமுயி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியான சோனாலி சமந்தா நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயம் திடீரென கையில் ஏதோ கடித்தது போல் உணர்ந்து சட்டென விழித்துக் கொண்டார். அப்போது விஷ நாகம் ஒன்றை பார்த்து தன்னை பாம்பு கடித்து விட்டது என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மந்திரவாதியும் பூஜை செய்வதாக காலத்தை போக்க சில நேரத்தில் சிறுமியின் உடல்நிலை மோசமாகி உள்ளது. இதனையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுமி உயிர் இழந்தார். இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் மந்திரவாதியிடம் அழைத்துச் செல்வதற்கு முன்பாக இங்கு அழைத்து வந்திருந்தான் காப்பாற்றியிருக்கலாம் நேரத்தை வீணாக்கி விட்டனர்” என தெரிவித்துள்ளார்.