காருக்குள் கொடிய வகை பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காந்திபுரம் கிராமம் பகுதியில் உள்ள மாவு மில் எதிரில் கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அந்த காருக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை அறிந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காருக்குள் சோதனை செய்துள்ளனர். இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பு ஒன்று சைலன்சர் வழியாக வெளியே வந்துள்ளது.
உடனே அந்த பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். அந்த பாம்பு கொடிய விஷமுள்ள கொம்பேறி மூக்கன் வகையை சார்ந்தது. இது பாம்பு உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுள்ளனர் . காருக்குள் பாம்பு இருந்தது அந்த பகுதியில் சிறிது நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.