ஆனால் நம்மை பிரிப்பதற்கு , சிதைப்பதற்கு , சாதி அடிப்படையில் சிதற அடிப்பதற்கு , மதவாத சக்திகள் துடிக்கிறார்கள் , தூண்டிவிடுகிறார்கள். அதன் விளைவு தான் பெரியார் சிலைகளை உடைப்போம் என்பது. அம்பேத்கர் சிலைகளையும் , பெரியார் சிலைகளையும் உடைக்க முடியும்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சமூக நீதி என்ற கோட்பாட்பாடு கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது. அது எவராலும் தகர்க்க முடியாத ஒரு மகத்தான கோட்டை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார் .
Categories