Categories
அரசியல்

மேடையில் கண் கலங்கிய கேப்டன் மகன்…. அழுகுரல் பேச்சால் தொண்டர்கள் சோகம்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது மகன் விஜய பிரபாகரன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். 

விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அடுத்த தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது ஆனால் அவரது உடல்நிலை குறித்து சிலர் அவதூறு பரப்புவதாக கண் கலங்கி அழுதார்.

 

Image result for vijayakanth son cry

உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் கண் கலங்கி கண்ணீர் வடித்தார். பின் தொண்டர்கள் சமாதானப்படுத்த முயற்சித்த போது, இதனை ஆனந்தக் கண்ணீர் என்றும் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டதாகவும் தெரிவித்தார். வெற்றியோ, தோல்வியோ முக்கியமல்ல மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஏங்குபவர் தலைவர் விஜயகாந்த். அத்தகைய அவர் நலமாக இருக்கிறார், இனியும் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |