விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
தல அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். பேபி அனிகா, விவேக், கோவைசரளா, தம்பிராமையா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைவருக்கும் மிகப் பிடித்த பாடலாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் ஒரு சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த பாடல் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதாவது 15 கோடி பேர் இந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரசிகர்கள் பலரும் உற்சாகமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.