தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று தமிழக அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஆதார் அட்டை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மற்றையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை 17 தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி ஒருவரும், வழக்கறிஞர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.
அதில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க சென்னை நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை, தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற புகைப்பட ஆதாரங்களை எடுத்துக் காட்டினர். புகைப்பட ஆதாரங்களாக பார்த்த நீதிபதிகள் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்ற வில்லை.
இதே நிலை தொடருமானால் கொரோனா அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நேரடியாக மதுபான கடைகளுக்கும் வந்து மதுவை வாங்குவதை விட அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு சென்று வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.