Categories
சினிமா தமிழ் சினிமா

“கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி”…. உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்…. மகிழ்ச்சியில் திகைத்துப் போன நயன்தாரா….!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு கனெக்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படம் இடைவேளை இல்லாமல் உருவாகியுள்ள நிலையில் ரன்னிங் டைம் 99 நிமிடங்கள் ஆகும். இந்த படம் வருகிற 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உட்பட பட குழுவினர் திரையரங்குக்கு வருகை புரிந்தனர். முதலில் விக்னேஷ் சிவன் காரில் வந்து இறங்க சற்று நேரம் கழித்து நயன்தாராவின் கார் வந்தது. நயன்தாராவை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருந்த ரசிகர்கள் காரை சுற்றி வளைத்ததால் கார் நகரக்கூட முடியவில்லை. இருப்பினும் நயன்தாரா காரில் இருந்தபடியே ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு காரில் இருந்து இறங்கி தியேட்டருக்கு செல்லும் போது ரசிகர்களை பார்த்து கைகாட்டியபடியே புன்னகையோடு நயன்தாரா நடந்து சென்றார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |