நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறிய சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தனது பெயரை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் ராஜ்கிரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ராஜ்கிரண் மகளுக்கும், நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் முனிஷ் ராஜா என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து விட்டதாகவும், இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் சம்மதித்த பிறகும், அவர் மனைவி சம்மதிக்காத காரணத்தால் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து தகவல் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்தான் நடிகர் ராஜ்கிரன் தற்போது பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், முனீஸ் ராஜாவை மணமுடைத்துள்ளார் பிரியா. பிரியா என்ற நபர் தன்னுடைய வளர்ப்பு மகள் என்று தெரிவித்திருக்கிறார். தனக்கு தனது வளர்ப்பு மகள் தானே தவிர வேறு யாரும் பிள்ளைகள் இல்லை என்றும், ஒரு இந்து பெண் பிரியா என்பவரை நான் தான் வளர்ப்பு மகளாக வளர்த்து வந்ததாகவும், ஆனால் அவரை வளர்ப்பு மகளே என்று சொல்லாமல் தனது மகளே என்று சொல்லி பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் மிகவும் எமோஷனலான பதிவை ராஜ்கிரண் போட்டு உள்ளார்.
மேலும் இந்த பதிவில், முனிஷ் ராஜா என்பவருடன் இவருக்கு காதல் இருந்தது தெரிய வந்ததுமே அவரை பற்றி விசாரித்ததில், அவர் மிகவும் மட்டகரமானவர் என்று தனக்கு தெரிய வந்ததன் காரணமாக தனது மகளிடம் பேசி அவரை தனது மனைவிதான் சமாதானப்படுத்தி, இந்த நபர் குறித்த புரிதல்களை உருவாக்கினார் என தெரிவித்த ராஜ்கிரன்,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பிரியா என்பவர் வீட்டில் இருந்து குடும்ப தோழி ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறி, ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும், அதன் பிறகு அவருக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இறுதியாக தனது பெயரை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதற்காகவே இவர் இந்த பெண்ணை திருமணம் முடிக்க காத்திருப்பதாகவும், அப்படி திருமணம் நடத்து விட்டாலும் அவர் தனக்கு மருமகன் இல்லை என்றும்,
ராஜ்கிரன் பெயரை பயன்படுத்தி அவர் ஏதாவது பணம் பெற்றால் அதற்கும் தனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும், ஒரு காலத்திலும் முனீஸ் ராஜா என்பவர் தனக்கு மருமகனாக ஆகவே முடியாது என்றும் நடிகர் ராஜ்கிரண் காட்டமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.