கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் “இம்ரான் தாஹிர்” தலைவர் வசனத்தில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸெல் 50* (44) ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 43* (45) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து அசத்தினார். அதே போல இம்ரான் தாஹிரும் ட்விட் செய்துள்ளார். அதில் தீப்பெட்டி ரெண்டு பக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும். எங்கள எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும். பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல எடுடா வண்டிய போடுடா வீசுல” என்று பதிவிட்டிருந்தார்.
Theepetti rendu pakkam urasuna than theepidikkum.Yengala @ChennaiIPL yentha pakkam urasinalum theepidikkum.Pera @ChennaiIPL kettaley chumma athiruthillai #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) April 9, 2019