சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து தான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது. தற்போது சீனா முழுவதும் 1,300 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு மிகவும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக, சீன பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (விசா-ஆன்-அரைவல்) வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இலங்கைக்கு 40 வயது சீனப் பெண் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25-ஆம் தேதி இலங்கை விமான நிலையத்திலிருந்து அப்பெண் வெளியேறும் போது கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடாத் சுரவீரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து, சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.