ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றசாட்டை முன்வைத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் விரட்டி அடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இதற்க்கு மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே ராமேஸ்வரம் மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.