Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை”…. மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று  இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று  வழக்கு தொடர்ந்ததால்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.  அதன் பிறகு சில  காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது.

Image result for வாக்குப்பதிவு இயந்திர

இதனால் எப்போது உள்ளாட்சி தேர்தல்  என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அலுவலர்களை நியமிக்க  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

Image result for இந்திய தேர்தல் ஆணைய

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று  இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட தயாராகி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |