Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியது. மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா? மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணனுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளை திறக்கப்படுகிறது. மொத்த விற்பனை செய்யப்படமாட்டாது, தனி நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி அறிவித்துள்ளது. நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சமூக விலகல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம் என குறிப்பிட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஒரு பாட்டில் தான் விற்க வேண்டும். நிபந்தனைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |