நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.
37 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை திருட்டப்பட்டு கடத்தப்பட்டது. இந்நிலையில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மியூசியத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் சிலை ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டுவரப்படுகிறது. 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை மீட்டு சிறப்பு புலனாய்வு குழு டெல்லி வந்துள்ளது. நாளை மறுநாள் (செப்.13) காலை புலனாய்வு குழு நடராஜர் சிலையடன் சென்னை வருகிறது. நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு குலசேகரமுடையார் கோவிலிலேயே வழிபாட்டில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.