நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிவாஜி ரசிகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, மெரினாவில் சிவாஜியின் சிலை வைக்கப்படும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.