Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் உயிரிழந்த ஒருவரின் இறுதிசடங்கு நடைபெற்றது. அந்த நபரின் சடலம் வைக்கப்பட்டிருந்த இறுதிசடங்கில் கலந்து கொண்ட இறந்தவரின் உறவினர்கள் நண்பர்கள் என  60 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானா தோற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே  இறுதிச்சடங்கு விசேஷங்களை  வெகுநேரம் செய்யாமல் சடலங்களை உடனடியாக உடலை அடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட 60 பேரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் கொரானா பரவியது என்று சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

Categories

Tech |