இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே,
சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால், அதை தூக்கி கொண்டு போவதற்கும் பேரணி நடத்துகின்ற கும்பல்களே…. இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் பன்முக தன்மையை, இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கின்ற இந்த சங்கிகளின் கொட்டம் தமிழகத்தில் அதிகரித்து இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக்கழக தலைவர் அவர்களுக்கு சொல்கின்றேன். நாங்களும் முகநூல் பக்கங்களிலும், whatsapp குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும் நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவு சக்திகளாலும், இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வசைப்பாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா கும்பல்கள் எடுத்து வைக்கிறான்.
நாளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பெரியாரிய கருப்பு சட்டை தோழர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் உயிரையும் கொடுத்து காப்பவனாக இருக்கக்கூடிய சக்திகள் என் இஸ்லாமிய சக்திகளும், கிறிஸ்துவ அவர்களும் என்பதை தமிழக அரசே புரிந்து கொள்.அமைதி வழியில் கூடியிருக்கின்ற இந்த கூட்டம் நாளைக்கு ஒருமுறை மாற்று கருத்தோடு சிந்தித்தால் தமிழகம் தாங்காது, தமிழகம் தாங்காது அது எச்சரிக்கை என தெரிவித்தார்.