கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால், இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில், மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு முகமை மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு நிறுவனங்களின் மூலம் விசாரிப்பது தான் சாலத் சிறந்தது.
தமிழ் மொழியை வளர்க்காத திமுக என பாஜக ஆர்ப்பாட்ட ம் நடத்தியது தொடர்பாக பேசிய திருமாவளவன், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை தான் இந்த கதை. பாஜக தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக கவழிபடுகின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் தமிழ் தேசிய அரசிற்கு வந்தால் வரவேற்கிறோம். NIA சுதந்திரமாக இயங்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அது சிபிஐ போல முடங்கி கிடக்கிறது.
பாஜக அரசுக்கு உடன்பாடு உள்ள வழக்கில் மட்டும்தான் அது தலையிடுகிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸும் தொடர்புடைய வழக்குகளில் அது தலையிடுவது இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இது உள்ளபடியே வேதனை கூறியது, கண்டிக்கத்தக்கது.
அரவிந்த் அவர்கள் குஜராத் தேர்தலுக்காக ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம், லட்சுமி படம் அச்சிட வேண்டும் என்று சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தேர்தலுக்காக மட்டும் இதை சொல்லி இருக்கிறாரா ? அல்லது அடிப்படையில் அவரும் சனாதான சக்தியா ? என்கின்ற கேள்வி எழுகிறது, இது மிகவும் நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.