அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் அவசர நிலையை 4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவுகளை பிறப்பித்ததால் மக்கள் சிலர் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்தனர்.
அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆளுநர் கிரெட்சன் விட்மர் வியாழக்கிழமை இரவு மிச்சிகனின் COVID-19 அவசரகால நிலையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால் சட்டமன்றத்தில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மே 28 வரை அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததைத் தொடர்ந்து, அம்மாகாண மக்களும் அந்த உத்தரவினால் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்தனர். ஆளுநர் கிரெட்சன் விட்மரால் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சிலர் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்தியவாறு நேற்று இரவு மிச்சிகனில் இருக்கும் மாநில நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்தனர்.
மிச்சிகன் மாகாண சட்டசபை கட்டிடத்துக்குள் அவர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்தபோது, கவர்னரின் அவசரநிலையை நீட்டிப்பது குறித்து சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதனால் அந்த தளத்துக்குள் போராட்டக்காரர்கள் யாரும் நுழையாதவாறு போலீசார் பார்த்து கொண்டனர்.