பெற்றோர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணிக்கபுரம் பகுதியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாளவிகா தனது வீட்டின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆன பின்பும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகள் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் மாளவிகாவை மீட்டு அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாளவிகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாளவிகா தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்ததாகவும் அவரது பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அவரது பெற்றோர் மாளவிகாவிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த முயற்சி செய்ததால் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் பின் மாளவிகாவின் தற்கொலைக்கு பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.