Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பகீர்!…. குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து மாணவனை தீர்த்து கட்டிய மாணவி….. காரணம் என்ன….? குமரியில் பரபரப்பு…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாலிபர் தன்னுடைய நண்பனிடம் கூறவே அவர் சாரோனை பாறசாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரோன் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலிபரின் தந்தை ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் தன்னுடைய மகனின் காதலி மற்றும் பெற்றோர் தன்னுடைய மகனை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய மகனின் மரணம் குறித்து ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய மகன் காதலித்து வந்த பெண்ணுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அப்பெண்ணின் முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியக்காரர் கூறியுள்ளார்.

இதனால் என்னுடைய மகனை திட்டம் போட்டு அவர்கள் வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர். இதை குடித்த என்னுடைய மகன் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டான். அவர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக என்னுடைய மகனை திட்டம் போட்டு கொலை செய்து விட்டனர். இது குறித்து காவல்துறையினர் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை என்று கூறினார்.

மேலும் காவல்துறையினர் கூறுகையில் ஜெயராமன் கூறுவது போன்று வாலிபரின் ‌ பிரேத பரிசோதனையில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால் ஜெயராமனின் சந்தேகத்தை போக்குவதற்காக இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் அனைத்தும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |