Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. நெஞ்சில் கத்தியால் குத்தி…. முட்புதரில் கிடந்த பரிதாபம்…!!

பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவருடைய மகன் ரேஷ்மா(17) . இவர் இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை தேடுதல் வேட்டையில் சிறுமி நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு முட்புதரில் கிடந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை சென்று பார்த்தபோது அவருடைய பக்கத்தில் ஒரு செல்போன் கிடந்துள்ளது.

செல்போனை எடுத்து யாருடையது என்று சோதனை செய்து பார்த்ததில் அது அவருடைய உறவினர் மனைவியான அணு என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அந்த மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கண்காணிப்பு கேமரா  காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் மாணவியுடன் அணு நடந்து செல்வது தெரியவந்தது. ஆனால் தற்போது அணு எங்கிருக்கிறார்? என்பது குறித்த தகவல் தெரியாததால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |