Categories
கல்வி பல்சுவை

மாணவர்களே…!.. ”நாளை முதல் யாரும் வராதீங்க”….. 12 நாட்களை கொண்டாடுங்க …!!

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்கள் மத்திய , மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தால் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பருவத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 27, 30 ஆகிய 2 நாட்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு நடைபெறுகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கும், 25ஆம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டை மாணவர்கள் கொண்டாடுவதற்கும் இந்த விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே வரும் 23, 24, 26, 31 ஆகிய 4 நாட்கள் விடுமுறை ஆகும். தற்பொழுது கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும் 4 நாட்களுக்கு சனிக்கிழமை அல்லது வேறு விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளனர். விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |