Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது என அடுத்தடுத்து பள்ளி கல்வித்துறையில் ஏராளமான மாற்றம் கொண்டு வரபட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளில் 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத அரசாணை வெளியிடப்பட்டுளள்து. மேலும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல் , வேதியியல் , கணித பாடங்களை படிக்கலாம் என்றும் , மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல் , உயிரியல் பாடங்களை  தேர்வு செய்து படிக்கலாம் என்றும் , இந்த புதிய நடைமுறை வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் அரசு முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |