Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய லாரி… இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக பலி… நாமக்கல்லில் நடத்த கொடூரம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தீ பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காளிமுத்து(32) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் மாணிக்கம் என்பவரது லாரியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடுகளை ஏற்றுக்கொண்டு 8 மணி அளவில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ராசிபுரம் பகுதியில் உள்ள ஆண்டகளூர் கேட் மேம்பாலத்தில் லாரி சென்றுகொண்டிருந்துள்ளது.

அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் இருசக்கர வாகனத்தில் லாரிக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நிலைதடுமாறிய லாரி முன்னாள் சென்ற சிலம்பரசன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிலம்பரசன் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நிலையில் லாரி தீப்பிடித்து  அதில் இருந்த கயிறும் எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிலம்பரசன் மீதும் தீ பிடித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |