Categories
மாநில செய்திகள்

மீண்டும் அரங்கேறியது பொள்ளாட்சியில் கொடூரம்…..கழுத்து அறுத்து கொல்லப்பட்ட கல்லூரி மாணவி….!!

பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சடலம்  சாலையோரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த பெண் பிரகதி என்பதை உறுதியக்கினர்.

பின்னர், மாணவியின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? அல்லது பணம் மற்றும் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா என்று  பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |