விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கு மாவட்ட சப்- கலெக்டர் தினேஷ்குமார் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு சுமார் 117 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி தொழில் மற்றும் கட்டிட வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த சப்-கலெக்டர் தினேஷ்குமார் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் உள்ள 117 குடும்பங்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் கிணறு ஓன்று நீண்டநாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றது. அதனை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தினேஷ் குமார் கூறியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ், பஞ்சாயத்து செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.