பிரபலமான நடிகை திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சை என்கிற காத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா சசி. தற்போது 35 வயதாகும் இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு எட்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மூளைப் புற்றுநோய் கட்டி மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிலிருந்து மீண்ட அவர் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.